Friday, February 3, 2012

யுத்தத்தில் இடம்பெயர்ந்த 700000 பேர் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர் –இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது!

Friday, February 03, 2012
இலங்கை::வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 700000 பேர் மீள்குடியேற்றப் பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த இன்னமும் 6000 பேர் மட்டுமே முகாம்களில்தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பாரியளவில் வெற்றியளி;த்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது முதல் இதுவரையில் 724135 பேர்அல்லது 216412 குடும்பங்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டில் இறுதிக் கட்ட யுத்தம் இடம் பெற்ற போது சுமார் 300000பொதுமக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதில் மிக சொற்ப அளவிலானவர்களே தற்போது முகாம்களில்எஞ்சியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு இடம்பெயர் முகாம்களே இன்னமும் இயங்கி வருகின்றன என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்களே இன்னமும்மீள் குடியேற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டதன் பின்னர் இவர்களை மீள் குடியேற்றநடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment