Sunday, February 26, 2012
மதுரை::சங்கரன்கோவில் தொகுதியில் பாஜ வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால், 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது. பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் முகாமிடுவதால் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கும் எனத் தெரிகிறது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரான கருப்பசாமி இறந்ததால், இத்தொகுதியில் மார்ச் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு அதிமுக சார்பில் முத்துசெல்வி, திமுக வேட்பாளராக ஜவகர் சூரியகுமார், தேமுதிக சார்பில் முத்துக்குமார், மதிமுக வேட்பாளராக சதன் திருமலைக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளர் கடந்த 23ம் தேதி மனு தாக்கல் செய்தார். தேமுதிக, மதிமுக வேட்பாளர்கள் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். அதிமுகவுக்காக அமைச்சர்கள் முகாமிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக வேட்பாளர் 27ம் தேதி மனு தாக்கல் செய்கிறார். அன்றைய தினமே கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மேற்பார்வையில் தேர்தல் பணி நடக்கவுள்ளது. கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.
மதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் சங்கரன்கோவிலில் நேற்று நடந்தது. வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த வைகோ, இத்தொகுதியில் தொடர்ந்து 20 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் மார்ச் முதல் வாரத்தில் பிரசாரம் செய்வார் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதிமுகவுக்கு தங்கள் கட்சியின் செல்வாக்கை காட்ட விஜயகாந்த் தொடர்ந்து அத்தொகுதியிலேயே முகாமிட்டு தேர்தல் பணியை முடுக்கிவிடவும் திட்டமிட்டுள்ளார். தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவளிக்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இந்நிலையில் பாஜ சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசித்து வந்தனர். அக்கட்சி வேட்பாளராக சென்னையை சேர்ந்த வக்கீல் முருகன்(34) போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 முனைப் போட்டியில் உள்ள இத்தொகுதியில், பாஜ.வும் வேட்பாளரை அறிவித்துள்ளதால் 5 முனைப் போட்டி உருவாகி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இடைத்தேர்தலில் பிரசாரம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று பல்வேறு கட்சியினர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment