Saturday, February 11, 2012

இந்து ராம் ரூ.400 கோடி நில மோசடி : போலீசில் ஆவணங்களை கே.சி.பழனிச்சாமி ஒப்படைத்தார்!

Saturday, February 11, 2012
சென்னை::ரூ.400 கோடி மதிப்புள்ள நிலத்தை இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் மோசடி செய்தது தொடர்பான ஆவணங்களை முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், 'இந்து' ராம், ரமேஷ் ரங்கராஜன் உள்ளிட்ட 7 பேர் மாமல்லபுரத்தில் எனக்கு சொந்தமான ரூ.400 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து விட்டனர். ஆனால் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, என் மீதே வழக்குப்பதிவு செய்ய வைத்து கைது செய்ய வைத்தனர். இதனால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கே.சி.பழனிச்சாமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலை 11 மணிக்கு வந்தார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் மகேஷ்வரன் விசாரணை நடத்தினார்.

நிலத்திற்கு சொந்தமான ஆவணங்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏமாற்றிய விதம், தான் மேற்கொண்ட மேல் நடவடிக்கை, மிரட்டப்பட்டது குறித்து போலீசாரிடம் அவர் விளக்கம் அளித்தார். விசாரணை முடிந்து மதியம் 1.30 மணிக்கு வெளியே வந்தார். அப்போது, கே.சி.பழனிச்சாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இந்து ராம் என்னிடம் செய்த நில மோசடி குறித்து போலீசாரிடம் விளக்கம் அளித்தேன். மேற்கொண்டு சில ஆவணங்களை போலீசார் கேட்டனர். அதனை கொடுப்பதற்காக இன்று வந்தேன். விசாரணை சரியான கோணத் தில் சென்று கொண்டிருக்கிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத் தருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கே.சி.பழனிச்சாமி கூறினார்.

No comments:

Post a Comment