Thursday, February 09, 2012பெங்களூர்::சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி இருவரும் பெங்களூர் கோர்ட்டில் இன்று ஆஜராயினர். வழக்கு விசாரணை 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி கோர்ட் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ள சசிகலா, 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இளவரசி இருவரும் கோர்ட்டில் ஆஜராகினர். சட்டசபை கூட்டத் தொடர் இருப்பதால் ஆஜராக முடியவில்லை என ஜெயலலிதா தரப்பிலும், உடல்நல பாதிப்பால் ஆஜராக விலக்க கேட்டு சுதாகரன் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
சசிகலா தரப்பில் ஆஜரான வக்கீல் மணிசங்கர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘வாக்குமூலத்தை தமிழில் பதிவு செய்ய அனுமதி கேட்டு சசிகலா தாக்கல் செய்த மனுவை கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருக்கிறோம். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருப்பதால் வழக்கை 2 வாரத்துக்கு
ஒத்திவைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதற்கு அரசு வக்கீல் ஆச்சார்யா எதிர்ப்பு தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நிலுவையில் இருப்பதால் வரும் 18-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக கூறிய நீதிபதி, அன்று இருவரும் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment