Friday, February 10, 2012

மதுரை அருகே கோர விபத்து கிணற்றில் வேன் பாய்ந்து 10 பேர் பலி!

Friday, February 10, 2012
மதுரை::மதுரை அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கட்டுப் பாட்டை இழந்து கிணற்றுக் குள் பாய்ந்ததில் தூத்துக் குடியை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் சதீஷ்வரன். சென்னையில் இன்ஜினியராக உள்ளார். இவருக்கும் தூத்துக்குடி மூன்றாம் மைல் பகுதியை சேர்ந்த உமாவிற்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் திருமணம் நடந்தது. சீர்கொடுக்க நேற்று மதியம் தூத்துக்குடியிலிருந்து டெம்போ வேனில் திருமண கோஷ்டியினர் புறப்பட்டனர். புதுமண தம்பதியுடன் 15க்கும் மேற்பட்டோர் தேவாரம் சென்றனர்.

அங்கு மணமக்களை இறக்கிவிட்டபின் மீண்டும் வேன் தூத்துக்குடி புறப்பட்டது. அந்த வேனில் டிரைவர் உள்பட 13 பேர் வரை இருந்துள்ளனர். இவர்கள் வந்த வேன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை கடந்து திருமங்கலம் நோக்கி வந்தது. திருமங்கலத்திலிருந்து 6வது கிமீ தொலைவிலுள்ள நக்கலக்கோட்டை கிராமத்தின் அருகே இரவு 7.20 மணிக்கு வேன் வந்தது. அங்கு ரோட்டில் துவரைமார் விரித்திருந்தனர். இதில் ஏறிய வேனின் சக்கரம் வழுக்கியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி ரோட்டைவிட்டு கீழே பாய்ந்தது. அருகே ஒரு அடி உயர தடுப்புச்சுவர் மட்டுமே உள்ள 50 அடி ஆழ கிணற்றுக்குள் வேன் தலைகுப்புற பாய்ந்தது. கிணற்றில் 15 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. இதில் வேன் மூழ்கியது. உள்ளே இருந்தவர்கள் உயிருக்குப் போராடி கூக்குரல் எழுப்பினர்.

தகவலறிந்த உசிலம்பட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்த குருஜெயச்சந்திரன்(35) மற்றும் நக்கலக்கோட்டை கிராமத்தினர் மற்றும் அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வேனின் கடைசி இருக்கையில் இருந்த தூத்துக்குடியை சேர்ந்த மணி(46), மாதவன்(41), கருப்பையா(45) ஆகிய 3 பேரை, வேனின் கண்ணாடியை உடைத்து மீட்டனர். இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். திருமங்கலம், கள்ளிக்குடியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்தன. 2 மோட்டார்கள் மூலம் கிணற்றிலிருந்த தண்ணீரை வெளியேற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிரேன் வரவழைக்கப்பட்டது. வேனிற்குள் தூத்துக்குடியை சேர்ந்த சித்திரவேல், குருவம்மாள், பாலகிருஷ்ணன், அருணா, கைலாஷ், சஞ்சாய், விஸ்வா மற்றும் வேன் டிரைவர் உள்பட 15 பேர் இருந்தனர். சம்பவம் நடந்து 3 மணி நேரத்திற்கு மேலாகியும் இரவு 10.30 மணி வரை யிலும் வேனை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள தால் வேனிற்குள் இருந்தவர் களில் 10 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. திருமங்கலம் எஸ்பி அஸ்ரா கார்க், டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தடுப்புச்சுவர் இல்லாத கிணறு: வேன் விழுந்த கிணறு நக்கலக்கோட்டையை சேர்ந்த சிவசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்துள் ளது. இந்த கிணற்றின் தடுப்புச்சுவர் பாதுகாப்பாக அமைக்கப்படவில்லை. ஒரு அடி வரை மட்டுமே சுவர் இருந்துள்ளது.

நேரில் பார்த்தவர் பேட்டி

உசிலம்பட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் குருஜெயச்சந்திரன்(35). அறக்கட்டளை நிர்வாகியாக உள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த இவர் கூறியதாவது: இரவு 7.20 மணியளவில் பைக்கில் திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி சென்றேன். நக்கலக்கோட்டை அருகே ஒரு வேன் என்னை கடந்து சென்ற சில விநாடிகளில் 'டமார்' என சத்தம் மட்டும் கேட்டது. திரும்பி பார்த்தபோது வேனை காணவில்லை. அதிர்ச்சியடைந்த நான் அருகேயிருந்த தோட்டத்தில் இறங்கி பார்த்தபோது அங்கு கிணறு இருந்தது.

உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டது. எட்டிபார்த்தபோது வேன் உள்ளே தலைகுப்புற பாய்ந்து கிடந்தது. உடனே கிணற்றில் இறங்கி வேனின் பின்பக்க கண்ணாடியை உடைத்தேன். உள்ளேயிருந்த மணி, கருப்பையா, மாதவன் ஆகியோரை அடுத்தடுத்து மீட்டேன். 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளித்தேன். கருப்பையா தெரிவித்த தகவலின் பேரில் அவரது உறவினர் பழனிச்சாமி வரவழைக்கப்பட்டார். அவர் மூலமே உறவினர்கள் சிலர் பற்றி அடையாளம் தெரிந்தது. அவரும் மயங்கிவிட்டார் என்றார்.

No comments:

Post a Comment