Wednesday,January,04,2012இலங்கை::ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால்நியமிக்கப்பட்ட தாருஸ்மன் தலைமையிலான குழுவினரின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதாக ஐக்கியதேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கியநாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால், தாருஸ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய குழுநியமிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை நிராகரிப்பதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
அறிக்கை வெளியிடப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும் ஐக்கியதேசியக் கட்சி தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிடவில்லை.
குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் சிரேஸ்டஅரசாங்க உத்தியோகத்தரும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆட்சி செய்த காலத்தில்அவரின் செயலாளராக கடமையாற்றிய பிரட்மன் வீரக்கோன் தலைமையில் குழுவொன்றுநியமிக்கப்பட்டுள்ளது.
தாரூஸ்மன் அறிக்கையை நிராகரிப்பதாக தற்போது ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.
பிரட்மன் வீரக்கோன் தலைமையிலான குழுவினர் அறிக்கைசமர்ப்பித்தார்களா என்பது பற்றி அறிவிக்கப்படாத நிலையில், அறிக்கையை நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தாருஸ்மன் அறிக்கை அரசாங்கத்தின் குழந்தை என கட்சிசுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் கிரியல்ல போன்ற சிலபாராளுமன்ற உறுப்பினர்கள் தாருஸ்மன் அறிக்கையின் சில விடயங்களை வரவேற்பதாக கடந்தகாலங்களில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment