Tuesday, January 3, 2012

வை திஸ் தமிழ்வெறி தமிழ்வெறி காசி? வை திஸ் கொலைவெறி கொலைவெறிகாசி?காசி உனக்கு வெட்கமில்லையா? காசி நீ கொஞ்சம் யோசி:-Darktar-கொன்பியூசியஸ்!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::வை திஸ் கொலவெறி என்று சினிமாவிற்காக தனுஷ் பாடிய பாடல் ஒரு குறுகிய காலத்தில் உலகப் புகழ் பெற்றுவிட்டது. எத்தனையோ ஆயிரம் பாடல்களை பாடல்களை பாடிய பாடகர்கள் இருக்கையில் சமீபத்தில் அறிமுகமான தனுஷ் தானே எழுதி பாடிய பாடல் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. தனுஷ் கூட தான் பாடிய பாடல் இவ்வளவிற்கு பிரபலமாகும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். இதை வெறும் சினிமாப்பாடலாகவே கொள்ளவேண்டும்.ஆனால் யாழ்ப்பாணிகளுக்கு இந்த விடயம் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. உலகிலே யாருக்கும் இல்லாத திறமை இந்தியக் கலைஞர்களுக்கு உண்டு என்பது வெளிப்படையான உண்மை. புலிப்பாட்டு பாடிக்கொண்டிருந்த காசிக்கு இது தமிழ்க் கொலையாகத் தெரிகிறதாம்.தமிழா உனக்கு வெட்கமில்லையா என்று காசி கேட்டிருக்கிறார்.நாங்கள் கேட்கிறோம் காசி உனக்கு வெட்கமில்லையா? நீ இந்தியனா? நீ இந்தியாவில் என்ன செய்கிறாய். இலங்கை இராணுவத்திற்கு எதிராக போரிட்டவர்களே இலங்கையில் இருக்கிறார்கள். ஏன் நீ இலங்கை செல்லவில்லை? நீ பயங்கரவாதியா? தேசத்துரோகியா?தமிழ் பற்றி பேச உனக்கு தகுதி இருக்கிறதா?காசியை ஒரு கவிஞர் சொல்லிக்கொள்பவர்கள் முட்டள்கள்.நம்புங்கள் நாளை தமிழீழழம் மலரும்,புலிகளின் கழுத்தில் மாலைகள் தொங்கும் என்று பாடிய காசி தமிழீழம் என்ற பெயரில் கொலைவெறி கொண்ட பிரபாகரன் சொந்த இனத்தையே கொன்று கொண்டிருந்தபோது பிரபாகரனை புகழ்ந்துகொண்டிருந்தவர். பிரபாகரனின் குறுங்கால சட்டவிரோத அரசாங்கத்தில் குளிர்கழி,சுவையகம்,தங்ககம்.இரும்பகம்.பணியகம், இறுவட்டு என்றெல்லாம் புதிய தமிழை அறிமுகப்படுத்தி எல்லாம் புஸ்வாணமாகப் போய்விட்டது.புலிகளின் பின்புலத்தில் இருந்துவிட்டு தனது பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு புலிகள் அழிந்தபின் இலங்கைக்கு காலடி எடுத்து வைக்கமுடியாமல் இருப்பது அவரது துரதிஸ்டம். ஒன்றுவிட்ட சகோதரியைத் திருமணம் முடித்த காசி தமிழைப் பற்றிப் பேசுவது வேடிக்கையானது!காசி தான் ஒரு தமிழ் மொழிப் பற்றாளனாக காட்டிக்கொள்ள முற்படுகுது. தனது பிள்ளைக்கு இந்தியாவில் மருத்துவம் படிப்பித்து வெளிநாட்டில் சேவை செய்ய அனுப்பிவிட்டு காசி தமிழ் மொழி அழியுதென்று கவலைப்படுகுது. இலங்கையில் தமிழர்களின் வாழ்க்கையை பிரபாகரன் அழித்துக்கொண்டிருந்தபோது காசிக்கு கவலை இருக்கவில்லை. மாறாக காசி பிரபாகரனுக்கு புகழ் பாடிக்கொண்டிருந்தது. மொழி என்பது இனத்தோடு சம்பந்தப்பட்டது. அந்த இனம் அழிந்தால் மொழி யாருக்கு. ஆனல் ஆங்கிலம் கலந்து பாடல் எழுதுவதால் மொழி அழிந்துவிடாது. இந்தியத் தமிழர்களுக்கு ஆங்கிலம் தெரியும் அவர்கள் அதனால் அவர்கள் ஆங்கிலம் கலந்து கதைக்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாணிகளுக்கு ஆங்கிலம் தெரியாது. வெளிநாடு வந்தும் பல யாழ்ப்பாணிகளுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் சாதாரண ஆட்டோ சாரதிகூட சரளமாக ஆங்கிலம் பேசுவார். லெவ்ற்றிலை கட் பண்ணு றைற்றிலை கட் பண்ணு என்று அவர்கள் திசை கூறுவார்கள். யாழ்ப்பாணி றைற்றிலை கட் பண்ணு என்றால் கையை வெட்டி விடுவான்.

சினிமா வேறு தமிழ் வேறு. சினிமா ஒரு வியாபாரம். “தனுஷ்” மட்டும் ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பாடவில்ல. “நல்லோர்கள் வாழ்வைக்காக்க நமக்காக நம்மைக் காக்க HAPPY NEW YEAR. இதை புது வருட வாழ்த்துக்கள் என்று யாரும் பாடவில்லை பாடவும் முடியாது! THE PUZZLE WHO IS THE BLACK SHEEP. HOT SUMMER MORNING GIRL WENT TO WALKING, ஹலோ மை டியர் ராங் நம்பர் இந்தப் பாடல் கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பப்பட்டது. ரெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா? டிஜிற்றலில் செதுக்கின குரலா? “சிக்குப்புக்கு ரயிலே” இப்படி ஆங்கிலம் கலந்த தமிழ்ப் பாடல்கள் பல எழுதியவர் கவிஞர் “வாலி” இப்படி ஆங்கிலம் தமிழ் கலந்து எழுதப்பட்ட சினிமாப்பாடல்களை விரல்விட்டு எண்ணிவிட முடியாது. . இன்னுமும் பாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. Remix என்ற பெயரில் ஆங்கிலம் கலந்த பாடல்களே அதிகம் பாடப்படுகின்றன.படத்தின் சூழ்நிலைக்கேற்ப மெட்டுக்காகவும்,பாடுவதற்கு இலகுவாகவும் அர்த்தம் மாறிவிடக் கூடதென்பதற்காகவும் ஆங்கிலச் சொற்களை சில தமிழ்ப்பாடலில் சேர்ப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இது சினிமா!!

ஆனல் யாழ்ப்பாணி காசிக்கு என்ன பிரச்சனை இவர் ஏன் தமிழைக் கொல்லுகிறார்கள் என்று கொலவெறி பாட்டுக்கு தனது கொலை வெறியக் காட்டியிருக்கார்.இலங்கையில் அமுதன் அண்ணாமலை பாடிய “ஓஷீலா ஓ லீலா யு டோன்ற் லுக் அற் மி என்ற பொப் இசைப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த போது நாட்டில் தானே இருந்தவர். இந்தியர்களை விட தாங்கள் தான் சுத்தமான தமிழ் பேசுகிறோம். என்பது யாழ்ப்பாணிகளின் முட்டாள் தனமான நினைப்பு! பின்னை, பேந்து, காலமை, பங்காரடா, உண்ணாண, என்னெண்டு சொல்லிச் சொன்னால், என்று யாழ்ப்பாணிகள் பேசும். குப்பைத் தமிழ்ச் சொற்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியர்கள் பேசும் தமிழ் யாழ்ப்பாணிகள் விளங்கிக் கொள்வார்கள். ஆனால் யாழ்ப்பாணிகள் பேசும் தமிழ் இந்தியத் தமிழர்களுக்கு விளங்காது. ஒரு சினிமாப் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது. “பெண்ணின் மனதைத் தொட்டு” திரைப்படத்தில் யாழ்ப்பாணி ஒருவர் தமிழில் மேடையில் பேசிக்கொண்டிருக்கிறார். கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் எழுந்து யோவ் அந்தாளை தமிழிலை பேசச் சொல்லையா என்று சொல்லுவார். உடனே மயிலுச்சாமி எழுந்து நீ பேசையா நான் ட்ரான்ஸ்லேற் பண்ணிறேன் என்று யாழ்ப்பாணி பேசும் தமிழை மொழி பெயர்த்துச்; சொல்லுவார். இந்த நகைச்சுவை முற்றுலும் உண்மையைத்தான் சொல்லுகிறது.

தெனாலி திரைப்படத்தில் அப்துல் ஹமீதை நடிக்கச் செய்து அவர் பேசும் தமிழ் சுத்தத் தமிழ் பேசுகிறார் என்ற மாயையை காட்டியதும் யாழ்ப்பாணிகள் தாங்கள் சுத்த தமிழ் பேசுகிறோம் நினைத்துவிட்டார்கள். அப்துல் ஹமீது பேசுவது அறிவிப்புத் தமிழ். யாழ்ப்பாணத்தில் அசல் முஸ்லிம்கள் பேசுகிற தமிழை அப்துல் ஹமீது பேசுவதில்லை!ஆனால் யாழ்ப்பாணிகள் இதையெல்லாம் மறந்துபோய் உலகத்திலே சிறந்தவர்கள் என்று நினத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கனடாவில் தமிழ் வானொலிகளில், தொலைக்காட்சிகளில் இடம்பெறும் வர்த்தக விளம்பரங்களை கேட்டாலே போதும் யாழ்ப்பாணிகளின் தமிழ் எப்படியென்று!“நீலக்கால் நண்டு எயிற் நைன்ரிநைன்” வட்டுக்கத்தரிக்காய் எயிற்றிநைன் சென்ஸ். மொட்டைக்கறுப்பன் அரிசி சிக்ஸ் நைன்ரி நைன்” இப்படி இவர்களது விளம்பரங்கள். இதை அறிந்து கொள்ள சி.எம்.ஆர் வானொலி ரி.வி.ஐ விளம்பரங்களைக் கேட்டாலே போதும். பொருளைத் தமிழில் சொல்லுபவர்கள் விலையையும் எண்பத்தொன்பது சதம் தமிழில் சொல்லலாமே? அதிலும் ஒருவர் என்ன பாக்கிறியள் என்ரை செல்லக்கிளி சொல்லுறா என்று விளம்பரத்திற்கு வருவார் அவர் பேசுகிற தமிழைக் கேட்டாலே போதும் யாழ்ப்பாணத்துக் குப்பைத் தமிழ் எப்படியென்று அறிந்துகொள்ளலாம்.இந்திய சினிமாவையும்.பாடல்களையும் நம்பித்தான் யாழ்ப்பாணிகளின் வானொலிகள், தொலைக்கட்சிகள் உலகெங்கும் இயங்குகின்றன. யாழ்ப்பாணிகளின் விடியோக்கடைகளில் விஜய் ரி.வி, சண் ரி.வி, ஜெயா ரிவி என்று இந்திய தொலைக்காட்சியில் இடம்பெறுகின்ற தொடர் நாடகங்களையும். பதிவு செய்து வீடியோக்கடைகளில் விற்பனை வேறு நடைபெறுகிறது. இதெல்லாம் சட்டப்படி குற்றம். பதிப்புரிமை பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை

விஜய் ரி.வியில் நடைபெறும் பாடல் நிகழ்ச்சிபோல புலிப்பின்னாமிகளின் தொலைக்காட்சியான ரி.வி.ஐயில் நடைபெறுகிறது. யாழ்ப்பாணிகளின் சுத்தமான தமிழ் பேசத் தெரியாத பிள்ளைகள் பிள்ளைகள் பாட்டுப் பாடுகிறார்கள். அதில் ஒரு பிள்ளைக்கு எம்.எல்.வசந்தகுமாரி என்று கூடச் சொல்ல முடியவில்லை. அதில் வரும் நடுவர்கள் தமிழே பேசுவதில்லை. காகம் அன்ன நடை நடப்பது போலத்தான் இவர்கள். உங்களுக்கென்று ஒரு சொந்தமாக ஒரு பாடல் நிகழ்ச்சியை உங்களால் வழங்க முடியவில்லை. எதற்கு கொப்பியடிக்கிறீர்கள். ரமிழ்வண் தொலைக்காட்சியும் இந்திய சின்னத்திரை நாடகங்களைத்தான் ஒளிபரப்புகிறது. காஞ்சிபுரம் சேலை இல்லாமல் இவர்களால் திருமணவீடு செய்ய முடியாது.யாழ்ப்பாணிகளின் வாழ்க்கையே பெரும்பாலும் இந்தியாவில்தான் தங்கியுள்ளது. “வை திஸ் கொலவெறி” பாடலை யாழ்ப்பணத்தில் தமிழில் பாடியிருக்காம் என்று சொல்லி பெருமைப்படுகிறார்கள். தனுஷைக் கிண்டலடித்து அவர் பாடிய பாடலை அதே மெட்டில் பாடினாலும் தனுசிற்குத்தான் பெருமை. அவர்களுடைய திறமையில் ஒரு சிறு வீதம் கூட யாழ்ப்பாணிகளுக்கு இல்லை. எந்தச் சந்து பொந்திலும் புகுந்து கொல்லும் கொலைத்திறமை யாழ்ப்பாணிகளுக்கு உண்டு. அதை யாரும் மறுக்க முடியாது.கலை என்று வரும்போது யாழ்ப்பாணிகள் இந்தியர்களிடம் மண்டியிட வேண்டும். இந்தியர்களின் திறமையை குறை கூறுவதற்கு யாழ்ப்பாணிக்கு எந்த விதத்திலும் தகுதி இல்லை. இந்தியாவில் இருந்து அவர்களையே குறை கூறும் காசி நீ கொஞ்சம் யோசி.

No comments:

Post a Comment