Thursday,January 05, 2012சிட்னி டெஸ்டின் 2ம் நாளான நேற்று, எல்லைக் கோட்டுக்கு அருகே நின்றிருந்த இந்திய வீரர் விராத் கோஹ்லியை கேலரியில் இருந்த சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் கிண்டல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கோஹ்லி அவர்களை நோக்கி தனது கை விரலை நீட்டி பதிலடி கொடுத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்ககு இடையே 2வது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.
போட்டியின் போது, எல்லை கோட்டின் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில ரவுடி ரசிகர்கள், தாய் மற்றும் சகோதரியைப் பற்றி ஆபாசமாக விமர்சித்தனர். இதனால் கோபமடைந்த வீராத் கோலி, தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி தனது எதிர்ப்பை தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வீராத் கோலியிடம் கேட்ட போது 'எனது தாய் மற்றும் சகோதரியைப் பற்றி ஆபாசமாக விமர்சித்ததாலேயே அப்படி நடந்துகொள்ள நேரிட்டது' என்று கூறியுள்ளார்.
வீராத் கோலிக்கு அபராதம்!
வீராத் கோலியின் இந்த செயல் விதிமுறை மீறல் எனக் கூறி போட்டி நடுவரால், அவரது ஊதியத்திலிருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் போட்டி நடுவரிடம் வீராத் கோலி, தனது நிலையை வருத்தமுடன் விளக்கி மன்னிப்பும் கேட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர்களுடன் மனைவிக்குப் பதில் அம்மாக்களை துணைக்கு அனுப்பினால் என்ன?
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் விதத்தைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏற்கனவே 0-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் அவர்கள் பின்தங்கியுள்ளனர். சிட்னியிலும் கூட தோல்வியை நோக்கி அணி நடைபோடுகிறதோ என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தியாவுக்கு மிகச் சாதகமான மைதானம் இது கூறப்படுகிறது. இங்குதான் வி.வி.எஸ்.லட்சுமனும், சச்சின் டெண்டுல்கரும் பெரும் சாதனைகளை படைத்துள்ளனர்.
2004ம் ஆண்டு இங்கு நடந்த டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் போட்டார். 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 60 ரன்களை எடுத்தார். வி.வி.எஸ்.லட்சுமன் இதே மைதானத்தில் 178 ரன்களை எடுத்துள்ளார். ராகுல் டிராவிட் கூட ஆட்டமிழக்காமல் 91 ரன்களைக் குவித்த மைதானம் இது.
லட்சுமனுக்கு இது விருப்பமான வேட்டைக் களமாகும். ஆனால் தற்போதைய போட்டியில் அவர் எப்படி பரிதாபமாக ஆடி வருகிறார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சிட்னி இந்தியாவுக்கு சாதகமான மைதானம் என்று கூறினாலும் கூட தற்போதைய தொடரில், தற்போதைய போட்டியில் இந்தியா மிகப் பரிதாபமாக மோசமாக ஆடி வருகிறது. கெளதம் கம்பீர், லட்சுமன், விராத் கோலி ஆகியோர் இந்தியாவுக்காக சிறப்பாக இம்முறை ஆடவில்லை. இவர்களை நீக்கி விட்டுப் பார்த்தால் 8 வீரர்களுடன்தான் இந்திய அணி களம் இறங்கியுள்ளது என்றுதான் கூற வேண்டும். சச்சின், டிராவிட் போன்றோர் கூட தடுமாறிக் கொண்டிருப்பது வியப்பாக உள்ளது.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர்கள் தங்களது மனைவிமார்களுடன் ஷாப்பிங் போவது போலவும், ஜோடியாக இருப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகின. இதைப் பார்க்கும்போது மனதுக்குள் ஒரு கேள்வி எழுகிறது. ஒருவேளை, இந்த மனைவிமார்கள்தான், தங்களது கணவன்மார்களின் விளையாட்டு வேகத்தைத் தடுமாற வைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
கடந்த காலத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், தங்களது அணிகள் வெளிநாடுகளில் தடுமாறியபடி விளையாடி காலங்களில், உடனடியாக வீரர்களின் மனைவிகள், தோழிகள் நாடு திரும்புமாறு உத்தரவிட்டது நினைவிருக்கலாம். மேலும் சில வெளிநாட்டு அணி நிர்வாகங்கள், வீரர்களுடன் மனைவிகள், தோழிகளை அனுப்புவதை தடை செய்வது குறித்தும் யோசித்தன.
இப்போதும் கூட இந்திய வீரர்களுக்கு இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. இவர்களிந் விளையாட்டுத்திறன் தடுமாறுவது போல தெரிகிறது. எனவே பேசாமல், இந்திய வீரர்களுடன் தங்கியுள்ள அவர்களது மனைவிகளை (தோழிகள் யாரும் இல்லை!) திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து பிசிசிஐ பரிசீலிக்குமா?. இந்திய கிரிக்கெட் வாரியம் அப்படிச் செய்ய முன்வருமா? ஏன் செய்யக் கூடாது?. மனைவிமார்களை திரும்ப அழைத்துக் கொண்டு அவர்களுக்குப் பதில் வீரர்களின் தாயார்களை அனுப்பி வைக்கலாம். அவர்கள், தங்களது பிள்ளைகளுக்கு ஆறுதலும், அறிவுரையும் கூறி ஊக்கப்படுத்தி விளையாட வைக்க முயல்வார்கள், வீரர்களுக்கும் திசை திரும்பல் இல்லாமல், வெற்றியைக் குறி வைத்து விளையாட எளிதாக இருக்கும்.
செய்ய நினைத்தால் செய்யலாம், உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த கிரிக்கெட் போர்டு நம்ம போர்டுதான். அது நினைத்தால் முடியாத காரியமா!
No comments:
Post a Comment