Tuesday, January 31, 2012

கிரிக்கெட் மைதானத்தில் பெண் போலீஸை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி கைது- காட்டிக் கொடுத்தது சிசிடிவி!

Tuesday, January 31, 2012
பெங்களூர்::பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி அனுஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊப்ளி மாவட்ட மின்சார துறை நிர்வாக இயக்குனரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவும் இருப்பவர் பங்கஜ்குமார் பாண்டே. இவரது மனைவி அனுஜா துபே பாண்டே. நேற்று முன்தினம் இவர், தனது மகளுடன் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த சி.சி.எல் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை காண சென்றார்.

ஸ்டேடியத்தின் 1-வது நுழைவு வாயில் வழியாக ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியும், மகளும் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அல்சூர் கேட் பெண்கள் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா நாயக், ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியிடம் நுழைவு டிக்கெட்டை கொடுக்கும்படி கேட்டார். அவரிடம் ஒரே ஒரு டிக்கெட் மட்டும் தான் இருந்தது. இதனால் யாரையாவது ஒருவரை தான் உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என்று இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மனைவி அனுஜாவிற்கும், இன்ஸ்பெக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே ஹனு, சின்னசாமி மைதானத்தின் உறுப்பினர்களுக்கு போன் செய்தார். அங்கு வந்த அதிகாரி ஒருவர், மற்றொரு டிக்கெட்டை கொடுத்து ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மனைவி, மகளை ஸ்டேடியத்திற்குள் அழைத்து சென்றார்.

போட்டி முடிந்து வெளியே திரும்பி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திட்டியதாகவும், பின்னர் திடீரென்று அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் ஸ்டேடியத்தின் 1-வது நுழைவு வாயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மைதானத்தில் உள்ள காமிரா மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி, போலீசை தாக்கியது உறுதியானது.

இதையடுத்து அஞ்சுமாலா கொடுத்த புகாரின் பேரில் நேற்று கப்பன்பார்க் போலீசார், ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவிக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக கோரமங்களாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் அங்கு வீடு பூட்டப்பட்டு கிடந்தது. அவரது ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருந்த அனுஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment