Wednesday,January,04,2012இலங்கை:திருகோணமலையில் நேற்று இரவு வர்த்தகர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். இவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
விகாரைவீதியில் தனது காரில் சென்றுகொண்டிருக்கும் போது இஇனம்தெரியாதவர்களால் சுடப்பட்ட இவர் மூதூர் மல்லிகைத் தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட 47 வயதுடைய ராஜகோபால என செய்தியாளர் தெரிவித்துள்ளார். பிரபல வர்த்தகரான இவர் மீதான கொலை முயற்சிக்கு காரணம் அறியப்படவில்லை. இவரது சகோதரர் நடேசபிள்ளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் என தெரியவருகிறது.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ள ராஜகோபால் திருமலையில் பிரபல விடுதி உன்றையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மற்றும் வியாபார ஸ்தலங்களையும் கொண்டிருந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. அருகில் காவல் நிலையங்கள், முகாம்கள் என பாதுகாப்பு நிறைந்த இந்தப் பகுதியில் சைலன்ஸ்ர் போடப்பட்ட துப்பாக்கியால் இவர் சுடப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவருடன் மற்றும் ஒருவரும் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் மேலதிக தகவல்களை பெற முடியவில்லை.
No comments:
Post a Comment