Monday, January 2, 2012

தமிழ், சிங்கள இனங்களை தனித்தனியாகப் பிரித்து ஆளும் தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது-வாசுதேவ நாணயக்கார!

Monday, January 02, 2012
இலங்கை::தமிழ், சிங்கள இனங்களை தனித்தனியாகப் பிரித்து ஆளும் தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இது இனங்களிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதே சிறந்த தீர்வாகும் எனவும் அமைச்சர் கூறினார்.

சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் வழங்கப் பட வேண்டும். இவ்வாறான தீர்வை வழங்குவதை எதிர்க்கும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் எதிர்காலத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏறும் நிலைமை உருவாகும்.

ஒரே நாடு மற்றும் நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் சம உரிமைகளை வழங்கி தமிழ் மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ், சிங்கள மக்களை தனித்தனியாகப் பிரித்து ஆளும் தந்திரோபாயத்தையே முன்னெடுக்கின்றது.

இது பிழையான செயற்பாடாகும். அத்தோடு இனங்களிடையே கசப்புணர்வையும் ஏற்படுத்தும். ஆகவே இலங்கையர்கள் என்ற ரீதியில் சிங்கள மக்கள் தமது கலை, கலாசார பாரம்பயங்களை பாதுகாத்துக் கொண்டும் தமிழ் மக்கள் தமது கலை, கலாசார, சகல பாரம்பயங்களின் தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டும் வாழும் தீர்வே சிறந்த தீர்வாகும் என வாசுதேவ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment