Friday, January 06, 2012புதுடெல்லி:ஊழல் குற்றச்சாட்டினால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாபு சிங் குஷ்வாஹாவை, பாரதிய ஜனதா சேர்த்துக்கொண்டதன் மூலம் மிகப்பெரிய தவறிழைத்துள்ளதாக அன்னா ஹசாரே குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஊழலுக்கு எதிரான லோக்பால் விஷயத்தில் இவர்களின் அக்கறை குறித்து சந்தேகம் எழுந்திருப்பதாக அன்னா குழுவைச் சேர்ந்த சஞ்சய் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் ஊழல் பேர்வழிகளும் சமூக விரோதிகளும் பல்வேறு கட்சிகளில் சேர்வதைப் பார்க்கும்போது நாட்டின் ஜனநாயகம் என்னாகுமோ என்ற கவலை எழுவதாகவும் அவர் கேள்வி எழுப்பினார். உத்தரப்பிரதேசத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல் புரிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், குஷ்வாஹாவின் வீட்டில், கடந்த புதன் கிழமை அன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
No comments:
Post a Comment