Wednesday, January 4, 2012

தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 95 சிங்கள பொலிஸார் மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சி கல்லூரியிலிருந்து நேற்று வெளியேறினர்!

Wednesday,January,04,2012
இலங்கை::தமிழ் மொழி டிப்ளோமா ஐந்து மாதப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 95 சிங்கள பொலிஸார் மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சி கல்லூரியிலிருந்து நேற்று
வெளியேறினர்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வின் வழிகாட்டலில் அரச கரும மொழிகள் திணை க்கள அனுசரணையுடன் இந்த தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சியை ஏற்பாடு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் தமிழ் மொழி பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கே. ரவிச்சந்திரன் தலைமையில் இது தொடர்பான வைபவம் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் கே. செல்வராசா விசேட அதிரடிப்படை மட்டக்களப்பு பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ். சேனாதீர ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். பயிற்சியை முடித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன

No comments:

Post a Comment