Monday, January 2, 2012

கடந்த வருட வாகன விபத்துக்களில் இரண்டாயிரத்து 500 பேர் பலி!

Monday, January 02, 2012
இலங்கை::கடந்த வருடம் பதிவான 37 ஆயிரம் வாகன விபத்துக்களில் சுமார் இரண்டாயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதிகளும், பாதசாரிகளும் உரிய முறையில் வீதி ஒழுக்கவிதிகளை கடைப்பிடிக்காமையே இத்தகைய விபத்துக்களுக்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வாகன விபத்துக்கள் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்படுவோரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவோ அல்லது இரத்துச் செய்யவோ நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment