Sunday, December 4, 2011

இலங்கை அருங்காட்சியகங்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு!

Sunday, December 04, 2011
அருங்காட்சியகங்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து தேசிய மரபுரிமைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடந்த காலத்தில் பெரும்பாலான அருங்காட்சியகங்களில் தொல்பொருள் பெறுமதியுடைய பொருட்கள் திருடப்பட்டமை மற்றும் இடம்மாறியமை தொடர்பான சம்பவங்கள் பதிவானதாக அமைச்சின் செயலாளர் காந்தி விஜேதுங்க கூறினார்.

அருங்காட்சியகங்களில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் அவர்களிடம் துப்பாக்கி இல்லாததால் பொருட்களை திருடுகின்றவர்களை எதிர்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருக்குத் தெளிவுபடுத்தியதை அடுத்து பொலிஸ் மா அதிபர் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மரபுரிமைகள் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment