Friday, December 09, 2011இலங்கை: உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ்விற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது இன்று பாராளுமன்றில் சபாநாயகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சபாநாயகரின் அழைப்பை ஏற்று நேற்றைய தினம் இலங்கை வந்த 5 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்வரும் 14ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment