Friday, December 9, 2011

இலங்கையில் பயிற்சி பெற்றுக்கொள்ளுமாறு இந்திய படையினருக்கு, இலங்கை இராணுவம் அழைப்பு!

Friday, December 09, 2011
இலங்கை:இலங்கையில் பயிற்சி பெற்றுக்கொள்ளுமாறு இந்திய படையினருக்கு இலங்கை இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

படை அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி பயிற்சி அளிக்கும் சாத்தியம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு இராணுவத்தினர், இந்திய படையினரிடம் கோரியுள்ளனர்.

மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை இராணுவம் கனிசமான அளவு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

யுத்த தந்திரோபாயங்கள், யுத்த பொறிமுறைமை போன்றன தொடர்பில் இலங்கை இராணுவத்தினர் பெற்றுக் கொண்ட அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக அவர் குறிபிட்டுள்ளார்.;

இந்திய இராணுவ பயிற்சி முகாம் ஒன்றுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

No comments:

Post a Comment