Sunday, December 11, 2011

இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது எனினும் இது இந்திய உபகண்டத்துக்கு அச்சுறுத்தல்-ஜகத் ஜெயசூரிய!

Sunday, December 11, 2011
இலங்கை::இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

எனினும் இது இந்திய உபகண்டத்துக்கு அச்சுறுத்தல் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவ எக்கடமியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரம் மீதான சீனாவின் ஆதிக்கத்தை சில இடங்களில் தவராக எடுத்துக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புலிகளின் இராணுவ ரீதியான அச்சுறுத்தல் இனி இலங்கையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் இராணுவ ரீதியாக இலங்கையில் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் புலிகளுக்கு ஆதரவாக, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் பலர் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment