Thursday,December 29, 2011டோக்கியோ::அணுசக்தி திட்டங்களில் இந்தியாவுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக, ஜப்பான் பிரதமர் யோஷிகோ நோடா கூறியுள்ளார். மேலும், புகுஷிமா அணு உலை விபத்தின் அனுபவத்தை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவுடன் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த விரும்புவதாகவும் ஜப்பான் பிரதமர் கூறினார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள யோஷிகோ நோடா, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனையடுத்து, கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது இதை அவர் தெரிவித்தார். ஆக்கப்பூர்வப் பணிகளுக்கான அணுசக்தி தொழில்நுட்பத்தை ஜப்பானிடம் இருந்து பெற இந்தியா பேச்சு நடத்தி வந்தது. ஆனால், புகுஷிமா அணு உலை விபத்தால் அது தடைபட்டது. அணுஆயுத பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாத நிலையில், இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான உதவிகளை வழங்க ஜப்பான் மறுத்தது. ஆனால், தற்போது தனது நிலையில் இருந்து ஜப்பான் சற்று இறங்கி வந்துள்ளதாக, கூறப்படுகிறது.
No comments:
Post a Comment