Saturday, December 03, 2011புலிகளின் தளபதிகளின் ஒருவரான கேர்ணல் ரமேஷின் மனைவியான வத்சலாதேவியினால் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் தான் ஆஜராக போவதில்லை என என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரிதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனது இந்த தீர்மானம் குறித்து சவேந்திர சில்வா, அமெரிக்க நீதிபதி போல் ஒடினனுக்கு அறிவித்துள்ளார். தனது சட்டத்தரணி மூலம், இதனை அறிவித்துள்ள அவர், தனக்கு தூதர் என்ற சிறப்புரிமைகள் இருப்பதாக கூறியுள்ளார். சவேந்திர சில்வா, கடந்த வியாழக்கிழமை, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment