Friday, December 9, 2011

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரைகளை அமுல்படுத்த புதிய பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்படும்-இலங்கை அரசாங்கம்!

Friday, December 09, 2011
இலங்கை:உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரைகளை அமுல்படுத்த புதிய பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் காணப்படும் நிறுவனங்களின் மூலம் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்த முடியாவிட்டால் புதிய பொறிமுறைமையொன்றை உருவாக்கத் தயார் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பொருத்தமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவை அனைத்தும் நாட்டுக்கு பொருந்தக் கூடிய வகையில் மேற்கொள்ளப்படும் எனவும், அழுத்தங்களுக்கு அடி பணிந்து தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

துரித கதியில் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், புலம்பெயர் (புலி) தமிழர்களில் ஒரு பிரிவினரும், உள்நாட், வெளிநாட்டு சக்திகளும் அவசர அவசரமாக ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கொடூர சம்பவங்கள் தொடர்பில் இந்தத் தரப்பினர் மௌனம் காத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment