Thursday, December 01, 2011வாஷிங்டன்: இந்தியாவின் மீது பாகிஸ்தான் மீண்டும் தனது தீவிரவாதத்தைத் தொடர்வது நல்லதல்ல, என்று அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான், இந்தியாவின் முக்கிய நகரமான மும்பை மீது குண்டுவீச்சின் மூலம் தனது தீவரவாத தாக்குதலை நடத்தியது. இதனால், இந்தியா சந்தித்த இழப்பு மிக பெரியது.
இதுகுறித்து, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முன்னாள் ஆலோசகரான ஜேம்ஸ் ஜோன்ஸ் கூறியதாவது, பாகிஸ்தான் இந்தியா மீது 2008ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலின் போதே பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானை எதிர்த்து கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யாமல் பொறுமை காத்தார். இனியும் பாகிஸ்தான் இந்தயா மீது தாக்குதலை தொடர்ந்தால் மிக பெரிய இழப்பை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment