Tuesday, December 13, 2011

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக அமெரிக்க இணையத்தளம் மூலமாக கையெழுத்து வேட்டை தீவிரம்!

Tuesday, December 13, 2011
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக அமெரிக்க வெள்ளைமாளிகையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மூலமான கையொப்பம் இடும் நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொன்சேகாவின் விடுதலைக் குறித்து அவரது மூத்த மகளான அப்ஸரா இந்நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

மேற்படி இணையத்தள மனுவில் 25 அயிரம் கையெழுத்து பெறப்பட்டால் பொன்சேகாவின் விடுதலைக் குறித்து அமெரிக்க அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நடவடிக்கைக்கமைய இதுவரை 15 ஆயிரத்து 613 கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளது. இம்மாதம் 23 ஆம் திகதிக்குள் 25ஆயிரம் கையெழுத்துக்கள் பெறப்பட்டால் அவரது விடுதலைக் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment