Wednesday,December,14,2011இலங்கை::பிளாஸ்ட்டிக் கூடை பாவனை சட்டம் தொடர்பில் நாடெங்கிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், வர்த்தகர்கள், நுகர்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இன்றைய தினம் பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வின் போது, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிளாஸ்ட்டிக் கூடைப் பாவனை தொடர்பில் நாடெங்களிலும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை எவை என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் தொடர்ந்து 11வது நாளாகவும் நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் கருத்து தெரிவித்த அமைச்சர் தினேஸ்குணவர்தன, எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால், எதிர்கட்சித் தலைமைப் பதவியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதனால் வரவு செலவுத் திட்ட செயற்பாடுகளில் இடையூறு ஏற்படலாம் என சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதில் வழங்கிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் எதுவும் இல்லை என தெரிவித்தார்.
எனினும் அரசாங்கத்தை மாற்றுவதே தமது ஒரே நோக்கமாக இருப்பதாக அவர் சபையில் தெரிவித்தார்.
இதற்கிடையில் வரவு செலவுத்திட்ட விவாத்தை ஆரம்பித்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல, இலங்கை மீது சர்வதேச நாடுகள் முன்வைத்துள்ள மனித உரிமை குற்றச்சாட்டுகளுக்கு, அரசாங்கம் உரிய வகையில் பதில் வழங்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டிலான் பெரேரா, அரசாங்கம் வெளிநாடுகளுடன் இது தொடர்பில் உரிய விளக்கமளிப்புகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்த விவாதம் இடம்பெற்று வருகிறது.
No comments:
Post a Comment