Thursday, December 8, 2011

சென்னை துறைமுகத்தில் 5 போர் கப்பல்கள்; நடுக்கடலில் வீரர்கள் சாகசம்!

Thursday,December,08,2011
சென்னை : இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கிழக்கு பிராந்திய கப்பல்படையை சேர்ந்த ஐஎன்எஸ் ஷிவாலிக், ஐஎன்எஸ் ரன்வீர், ஐஎன்எஸ் ரன் விஜய், ஐஎன்எஸ் ரஞ்சித், ஐஎன்எஸ் கிரிச், ஐஎன்எஸ் ஏர்வாட் போர் கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து கடந்த 5ம் தேதி சென்னை துறைமுகத்திற்கு வந்தன. இந்த போர் கப்பல்களை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பள்ளி & கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.

இதையடுத்து, கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 4 கப்பல்களிலும், ஐஎன்எஸ் ஷிவாலிக் என்ற கப்பலில் கவர்னர் ரோசய்யா மற்றும் பத்திரிகையாளர்கள் நேற்று பயணம் செய்தனர். ஐஎன்எஸ் ஷிவாலிக் போர் கப்பல் 6 ஆயிரம் டன் எடை கொண்டது. இந்த கப்பல் மும்பையில் இருந்தது. கடந்த ஆண்டு முதல் கடற்படையில் சேர்ந்து பணியாற்றி வருகிறது. இதில், 300 கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர். இந்த 5 போர் கப்பல்களும் கடலில் 50 கிமீ வரை சென்றது.

நடுக்கடலுக்கு சென்று போர் கப்பலில் பொருத்தப்பட்டுள்ள நவீன ரக துப்பாக்கிகளை கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் முறை, ராக்கெட் லாஞ்சர் ஏவுதல், கடலில் சிக்கி தவிப்பவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பது, கப்பல் சென்று கொண்டிருக்கும் போது ஹெலிகாப்டர் பறந்து சென்று தாக்குதல் நடத்திவிட்டு திரும்பவும் கப்பலுக்கு வருதல் போன்ற சாகசங்களை கடற்படை வீரர்கள் செய்து காண்பித்தனர்.

தமிழ்நாடு & புதுச்சேரி கடற்படை அதிகாரி கமாண்டர் அமர் மகாதேவன் கூறுகையில், ‘சென்னை துறைமுகத்தில் போர் கப்பல்களை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். இன்று மட்டும் 3 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்’’ என்றார்.

No comments:

Post a Comment