Monday, December 5, 2011

நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு!

Monday, December 05, 2011
சென்னை : பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு, இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். தடுப்பு வேலிகள் அமைத்து வாகனங்கள் சோதனை செய்யப்படும். குறிப்பாக தங்கும் விடுதிகள், வணிக வளாகங்களில் அதிரடி வேட்டை நடத்தப்படும்.

கோயில், தேவாலயங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும். சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிபவர்களை போலீசார் பிடித்து அதிரடி விசாரணை நடத்துவார்கள். நள்ளிரவு திடீர் வேட்டையும் நடத்தப்படும். பாதுகாப்பு பணிக்கு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட் டுள்ளனர். சந்தேகப்படும்படி சுற்றித்திரியும் நபர்களை விசாரிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத் தவரை 10 ஆயிரம் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்தே சென்னையில் பாதுகாப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 256க்கும் மேற்பட்டவர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த வெள்ளியன்று ஐஸ்அவுஸ் லாட்ஜில் பயங் கர ஆயுதங்களுடன் பிடி பட்ட 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், காட்பாடி, சேலம், கோவை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், பெரிய, சிறிய பாலங்கள், ரயில்வே அலுவலகங்கள், பணிமனைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மட்டுமின்றி 3 பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், உள்ளூர் போலீசார் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில்நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு அகற்றும் படையினர், மோப்ப நாய் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

No comments:

Post a Comment