Thursday, November 3, 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் உட்பட இலங்கையரின் பொறுப்புக்களை ஏற்பதற்கான தகுதி இல்லை-கெஹலிய ரம்புக்வல்ல!

Thursday, November 03, 2011
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் உட்பட இலங்கையரின் பொறுப்புக்களை ஏற்பதற்கான தகுதியும் இல்லை அவர்களால் அவ்வாறு செயற்பட வும் இயலாது என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கான சுற்று விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள போதிலும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்துடனான சந்திப்பு இடம்பெறவில்லை என்றும் இது குறித்து அரசாங்கத் தரப்பின் கருத்து என்னவென்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி இல்ல என்ற நிலைப்பாட்டையே அரசாங்கம் தொடர்ந்தும் கடைபிடித்து வருகின்றது. இது அரசியல் ரீதியிலும் நிரூபனமாகி உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment