Tuesday, November 22, 2011

நாடாளுமன்ற சம்பவம் குறித்து விசாரணை – சமல் ராஜபக்ஷ!

Tuesday, November 22, 2011
ஜனாதிபதியினால் நேற்று வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்ட தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலை குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று சபையில் அறிவித்துள்ளார்.

சில உறுப்பினர்களின் கோரிக்கைக்கிணங்கவே இந்த விசாரணையை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வரப்பிரசாதங்கள் குறித்த கேள்வியொன்றை எழுப்பிய வண்ணம், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன உரையாற்றுகையில், தாம் நேற்று நாடாளுமன்றத்திற்கு வருகையில், தமது ஆவணங்களை நாடாளுமன்ற காவல்துறையினர் பரிசோதித்ததாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment