Thursday, November 24, 2011

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கெளரவ ஆளுநர் அவர்களை சந்தித்தார்!

Thursday, November 24, 2011
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு திரு. ஜோன் ரெளகின் அவர்கள் கிழக்கு மாகாண கெளரவ ஆளுநர் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம அவர்களை 24.11.2011 அன்று திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றென்கின் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் திருகோணமலை முதலமைச்சர் செயலகத்தில் சந்திப்பு!

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றென்கின் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை திருகோணமலை முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பானது சிநேகபூர்வ கலந்துரையாடலாக அமைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் மற்றும் அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் அற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற விதவைகளின் வாழ்வாதார மேம்பாடு, மற்றும் சிறுவர் கல்வி அபிவிருத்தி என்பன தொடர்பாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் குறித்த சில உதவிகள் வழங்குவது தொடர்பாக உயர்ஸ்த்தானிகர் இணக்கம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment