Sunday, November 20, 2011கல்கமுவ காவற்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி கட்டிலுக்கு அருகில் மரணம்!
கல்கமுவ காவற்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி, அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் மரணமாகியதாக, காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
52 வயதான அவர், நேற்று மாலை அன்றைய கடமையை நிறைவு செய்து, தமது இல்லத்துக்கு சென்றுள்ளார்.
எனினும் இன்றைய தினம் அவர் கடமைக்கு திரும்பாததைத் தொடர்ந்து, காவற்துறை அதிகாரி ஒருவர் அவது இல்லத்துக்கு சென்று சோதனையிட்டுள்ளார்.
அங்கு அவரது கட்டிலுக்கு அருகில் கீழே விழுந்த நிலையில், காவற்துறை பொறுப்பதிகாரி சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூரண பரிசோதனைகளின் பின்னர், அவரது மரண் குறித்த காரணங்களை கூறமுடியம் எனவும் காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment