Tuesday, November 01, 2011
பிரித்தானியாவை தலமாகக் கொண்டு இயங்கும் சனல்–4 தொலைக்காட்சி, இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் குறித்து ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்திற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள காணொளி அமெரிக்காவில் திரையிடப்படவுள்ளது.
நாளை நவம்பர் மாதம் 2ஆம் திகதி அமெரிக்காவின் வொஷிங்டனில் குறித்த காணொளி காண்பிக்கப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் இலங்கை நட்புறவு ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான Chris Van Hollen (D. MD) மற்றும் Robert Aderholt (R. AL) ஆகியோரினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணொளி திரையிடப்பட்டதன் பின்னர் இலங்கையின் மீள் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.
வொஷிங்டன் நேரப்படி நாளை மாலை 3 மணி தொடக்கம் 5 மணிவரை இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

No comments:
Post a Comment