Sunday, November 06, 2011
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமை காரணமாக பேருந்து உரிமையாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் குறித்து தெளிவு படுத்தும் கடிதம் ஒன்று போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த தகவலை இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் பணிப்பாளர் சபையின் அனுமதிக்கு அமைய அனுப்ப தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கடிதத்தை நாளைய தினம் கையளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எரிபொருள்கள் விலையேற்றம் காரணமாக நாடாந்தம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபா வரை சங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment