Monday, November 14, 2011

மொன்டி புதிய பிரதமராகிறார் இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி விலகினார்!

Monday, November 14, 2011
ரோம்: இத்தாலியில் 3வது முறையாக பிரதமர் பதவியில் இருந்த சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி விலகினார். இதையடுத்து, மரியோ மொன்டி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் இத்தாலி, கடந்த 3 ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அடிக்கடி பாலியல் சர்ச்சையில் சிக்கிய பெர்லுஸ்கோனி, நிதிநெருக்கடியைத் தீர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எது வும் எடுக்கவில்லை. அதேநேரம் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் உதவியை நாடினார். ஆனால், பெர்லுஸ்கோனி
தலைமையிலான அரசுக்கு நிதியுதவி வழங்க யூனியன் மறுத்து விட்டது.
இதையடுத்து, அந்நாட்டு அரசியல் கட்சிகள் ஒன்று கூடி இந்த பிரச்னை குறித்து விவாதித்தன. நாட்டின் நலன் கருதி தாம் பதவி விலகுவதாக பெர்லுஸ்கோனி ஒப்புக் கொண்டார். எனினும், சில அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களை செய்தால்தான் கடன் வழங்க முடியும் என யூனியன் தெரிவித்திருந்தது.
இதன்படி, உரிய மாற்றங்கள் தொடர்பான சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்ற கீழ் சபை ஒப்புதல் அளித்தது.

இதை தொடர்ந்து, பெர்லுஸ்கோனி தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் ஜார்ஜியோ
நபோலிடனோவிடம் நேற்று முன்தினம் வழங்கினார். இதை அவர் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். பெர்லுஸ்கோனி பதவி விலகியதையடுத்து, ரோம் நக ரில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பு ஏராளமான மக்கள் திரண்டு பாட்டு பாடி, நடனமாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் முன்னாள் ஆணையராக இருந்த மரியோ மொன்டி இடைக்கால அரசின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.
எனினும், பெர்லுஸ்கோனி கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment