



Wednesday, November 09, 201117 வது சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலைதீவு நோக்கி பயணமாகி சென்றுள்ளார்.
விசேட வானூர்தி ஒன்றின் மூலம் சென்ற ஜனாதிபதி இன்று காலை மாலைதீவு நேரப்படி 8.45அளவில் அட்டு வானூர்தி நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை மாலைதீவு ஜனாதிபதி மொகமட் நஜுட், அவரது பாரியார் லயிலா அலி அப்துல் மற்றும் மாலைதீவின் அரச பிரமுகர்கள் வரவேற்றுள்ளனர்.
அந்நியோன்ய உறவுகளை மேம்படுத்தும் செயற்பாடுகள் என்ற தொனிப்பொருளில் 17 வது சார்க் மாநாடு எதிர்வரும் இரு தினங்களுக்கு அட்டு இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில், இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாடு இடம்பெற்று வருகிறது.
No comments:
Post a Comment