Tuesday, November 8, 2011

உலக நாடுகள் பல மேற்குலக ஏகாதிபத்தியவாதத்திற்கு அடிப்பணிந்துள்ள சூழ்நிலையில் அதற்கு எதிராக செயற்படுவது இலங்கையர்களின் கட்டாய கடமை-விமல் வீரவங்ச!

Tuesday, November 08, 2011
உலக நாடுகள் பல மேற்குலக ஏகாதிபத்தியவாதத்திற்கு அடிப்பணிந்துள்ள சூழ்நிலையில், அதற்கு எதிராக செயற்படுவது இலங்கையர்களுக்கு கட்டாயமாக மாறியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற இடதுசாரிகள் அறியாத இடதுசாரிகளின் பிரச்சினை என்ற தலைப்பிலான கருத்தரங்களில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏற்பட்டுள்ள நிலைமைய சரிவர அறிந்து, அந்த நிலைமை நன்கு அடையாளம் கண்டு, அதற்கு எதிராக பெரும் ஐக்கிய மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவற்றை கொண்டுள்ள சூடான் போன்ற நாடு பிளவுப்படுத்தக் கூடிய நாடுகளின் வரிசையில், ஏகாதிபத்தியவாதிகளின் நிகழ்ச்சி நிரலில் முன்னணி இடத்தில் இருந்தன.

இவ்வாறான ஏகாதிபத்தியவாத ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுக்கும் சவாலை இலங்கை எதிர்நோக்கி இருக்கிறது. இது குறித்து சரியான முறையில் சிந்திக் வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்துவதன் மூலம் வழிமுறைகளை கண்டறிய முடியாது. சித்தாந்தவாத குழுக்கள், மாக்ஸ்வாத புத்தகங்களை வாசித்து கொண்டு, கனவு ராஜ்ஜியங்களில் வாழ்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. சித்தாந்தளுக்குள் அடிமையாகாது, நாட்டின் உரிமை, உண்மை என்பவற்றை நன்கு உணர்ந்து அடையாளம் கண்டு செயற்படுவது அனைவரது கடமையாகும் எனவும் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

No comments:

Post a Comment