Wednesday, November 16, 2011மட்டக்களப்பு மாவடட்த்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்தியழுழு அங்குராபர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் விக்ரமசிங்க தலைமையில் இவ் அங்குரார்ப்பண வைபவம் இடம்பெற்றது.
கல்குடா தொகுதியிலேயே இம்முதலாவது மத்தியகுழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின்பேரில் கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி மத்தியகுழு தலைவராக கல்குடா தொகுதி அமைப்பாளர் கலாநிதி டி.எம்.சந்திரபால நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால உட்பட பெருமளவிலான மக்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment