Monday, November 28, 2011

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொள்ளும்-திஸ்ஸ அத்தநாயக்க!

Monday, November 28, 2011
கொழும்பு: தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட நான்கு கோரிக்கைககளை முன்வத்து ஐக்கிய தேசியக் கட்சியினால் நாளை கொழும்பில் நடத்தப்படவுள்ள எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் தலைவர்கள் உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டை சீரழித்து பொதுமக்களைப் படுபாதாளத்தில் தள்ளும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்கைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. இதனால் கட்சி பேதங்களை மறந்து எதிர்ப்புக் கூட்டத்தில் அனைவரும் பங்குபற்ற முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யவேண்டும் எனவும் பறிதல் சட்டத்தை வாபஸ் பெறவலியுறுத்தியும் வரவுசெலவுத்திட்டத்தை எதிர்த்தும் கொழும்பு ஹைட் பாக் மைதானத்தில் நாளை செவ்வாய்க்கிழமை எதிர்ப்புக் கூட்டத்தினை நடத்தப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித் துடன் இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஏனைய கட்சிகளுக்கும் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனையும் ஐக்கிய தேசியக் கட்சி அழைத்திருந்தது. இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இனப்பிரச்சினை தீர்வு இழுத்தடிக்கப்படுதல் போன்ற விடயங்களும் எதிர்ப்புக் கூட்டத்திற்கான காரணங்களில் உள்ளடக்கப்பட வேண்டுமென்று மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிடம் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக மக்கள் முன்னணியும் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் என அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மனோ கணேசனை அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்றுக்காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்தப் பேச்வார்த்தையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் கலந்துகொண்டார்.

இதன்போது எதிர்ப்புக் கூட்டத்திற்கான காரணங்களில் அரசியல் கைதிகளின் விடுதலை, இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுவது என்பவற்றையும் இணைத்துக் கொள்வதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு மனோ கணேசன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment