Friday, November 25, 2011

அக்கரைபற்று கடற் கரையில் கிடைத்த சடலம் லொக்கு சீயாவினுடையது: பொலிஸ்!

Friday, November 25, 2011
அக்கரைபற்று கடற் கரையிலிருந்து மீட்கபபட்ட சடலம் வத்தளையில் கடத்தப்பட்ட லொக்கு சீயா என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த ஆறாம் திகதியன்று அக்கரைப்பற்று பதூர் நகர் கடற்கரையிலிருந்து இந்த சடலம் மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

குறித்த நபர் கடந்த மாதம் 27ஆம் திகதி மாபாகே - கெரவலபிட்டிய பகுதியில் வேன் ஒன்றில் வந்த இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பபட்டிருந்த சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment