Sunday, November 13, 2011வீசா மோசடிகளில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒன் அரைவல் வீசாக்களை பயன்படுத்தி வர்த்தக மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுற்றுலா வீசா பெற்றுக் கொள்ளும் சிலர் வீசா கலாவதியானதன் பின்னரும் நாட்டில் தங்கியிருப்பதாகக் குறிப்பிபடப்படுகிறது.
வீசா விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட 80 வெளிநாட்டுப் பிரஜைகள் அண்மையில் சுற்றி வளைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கல்முனை பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment