Wednesday, November 16, 2011

சரணடைந்த புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு என நிறுவப்பட்ட அனைத்து புனர்வாழ்வு நிலையங்களையும் எதிர்வரும் சில மாதங்களுக்குள் மூடப்படும்!

Wednesday, November 16, 2011
சரணடைந்த புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு என நிறுவப்பட்ட அனைத்து புனர்வாழ்வு நிலையங்களையும் எதிர்வரும் சில மாதங்களுக்குள் மூடப்படும்!

இறுதிக் கட்ட யுத்தத்தில் சரணடைந்த புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு என நிறுவப்பட்ட அனைத்து புனர்வாழ்வு நிலையங்களையும் எதிர்வரும் சில மாதங்களுக்கு மூடி விடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

அத்துடன் எதிர்காலத்தில் இரு பயிற்சி நிலையங்கள் மட்டுமே செயற்படும் என்றும் அவர் கூறினார்.புனர்வாழ்வு நிலையங்களில் தற்போது 776 முன்னாள் போராளிகள் மட்டுமே உள்ளனர். இவர்களில் 100 பேர் பெண்களாவர். இவர்களும் விரைவில் சமூகமயப்படுத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment