Thursday, November 10, 2011இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையிலான விசேட கரந்துரையாடல் ஒன்று ளூயபெசi விருந்தகத்தில் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது வடக்கு கிழக்கு பகுதிகளின்; மீள்குடியேற்றம், இரு நாட்டு மீனவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள், மற்றும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்திய அரசாங்கத்தினால் வடக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் 50 ஆயிரம் வீட்டு திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்படுகிறது.
இதனிடையே புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக இந்திய அரசாங்கம் 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது.
No comments:
Post a Comment