Monday, November 28, 2011

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியும் - மைத்திரி குணரட்ன!

Monday, November 28, 2011
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியும் என தென் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார். சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் கட்சி விதிமுறைகளுக்கு புறம்பானது எனத் தெரிவித்து மைத்திரி குணரட்ன 20 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்த முறைப்பாடு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுயாதீன விசாரணை நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் இதுவரையில் பதில் எதுவும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், ரணில் விக்ரமசிங்க கட்சி உறுப்பினர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக வெளியான குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான சாட்சியாளராக புத்திக பத்திரணவை குறிப்பிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பலர் சாட்சியளிக்கத் தயாராக இருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment