Friday, November 04, 2011ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த செவிப்புலனற்றோர் மூவர் மீது ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் இருவர் காய மடைந்தனர். கொழும்பிலிருந்து திருமலை நோக்கிச் சென்ற வேக ரயிலே இவர்கள் மூவரையும் மோதியதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இச் சம்பவம் திருமலை பாலையூற்று பிரதேசத்தில் நண்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது. விபத்தில் திருமலை ஒசில், கண்ணகிபுரத்தைச் சேர்ந்த நாகநாதன் கமல்ராஜ் (25) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை காய மடைந்துள்ள ஏனைய இருவரும் திருமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழ ந்துள்ள கமல்ராஜின் சடலமும் பிரேத பரிசோதனைகளுக்காக திருமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட் டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment