Thursday, November 24, 2011தபால் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விநியோகிக்க முடியாமல் போன தேசிய அடையாள அட்டைகளை தபால் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையினால் சுமார் 30 ஆயிரம் அடையாள அட்டைகள் தேங்கியிருந்ததாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜகத் விஜேவீர குறிப்பிட்டார்.
அவற்றில் 15 ஆயிரம் அடையாள அட்டைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு உரியவை என்றும் அவர் கூறினார்.
இந்த வாரத்திற்குள் அடையாள அட்டைகள் உரியவர்களைச் சென்றடையும் என நம்புவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டைகள் கிடைக்கப்பெறுவதில் தாமதம் நிலவுமாயின் 0112 585 043 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு திணைக்களத்தின் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment