Tuesday, November 1, 2011

கூட்டமைப்பினர் வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுப்பதில் இலங்கையில் ஒன்றும் நிகழ்ந்து விடப்போவதில்லை-சிவநேசதுரை சந்திரகாந்தன்!

Tuesday, November 01, 2011
அடைய முடியாத இலக்கினையும் சாத்தியமற்ற விடயங்களையும் பேசிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுப்பதில் இலங்கையில் ஒன்றும் நிகழ்ந்து விடப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைப் பாராட்டி கெளரவிக்கும் வைபவம் நேற்று (31) திருக் கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கோளாவில் விநாயகர் மகா வித்தியா லயத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதிபர் பி. கிருஷ்ணபிள்ளை தலைமை யில் நடைபெற்ற இந் நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்பொழுது நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல விடயங்களைப் பேசி வருகின்றார்கள். அண்மையில் கூட இவர்கள் வெளியிட்ட கருத்து வேடிக்கையாக இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்ட பிச்சைதான் முதலமைச்சர் சந்திரகாந்தனின் வருகை என்று. நான் இந்த சந்தர்ப்பத்தில் பகிரங்கமாகக் கேட்கிறேன் எதிர்வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியுமா? ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் ஒன்று சேர்ந்து வாக்களித்தால் கூட அவர்கள் ஆட்சியமைக்க முடியாது. வேண்டுமானால் எதிர்க்கட்சியில் அமர்ந்து தமிழ் சமூகத்திற்கு எந்தவிதமான நன்மைகளையும் பெற்றுக் கொடுக்க முடியாது இருப்பர்.

கிழக்கு மாகணத்தைப் பொறுத்தவரையும் மூன்று சமூகங்களும் தற்போது ஒற்றுமை யுடன் செயற்படுகிறார்கள் – இவ் ஒற்றுமை கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது ஆட்சியமைக்கும் சக்தியை தீர்மானிக்கவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தினை கைப்பற்றும் தரப்பினர் ஆட்சியாளர் தரப்பில் இருந்தால்தான் எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.

1923ம் ஆண்டு மிக முக்கியமான தமிழர் ஒருவர் இலங்கையில் தமிழர் களுக்கான தமிbழம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென்று சொல்லியிருந்தார். ஆனால் இன்று வரை அந்த விடயம் சாத்தியமற்றதாகவே உள்ளது. தமிbழம் பெறப்படுமாக இருந்தால் எமக்கும் சந்தோஷம்தான் ஆனால் அது சாத்தியமற்ற விடயம் என்பது நன்கு புலப்படுகின்றது.

சாத்தியமற்ற விடயங்களைப் பேசிப் பேசி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களை குழப்புகின்றனர். மக்கள் இவர்களின் வீண் பேச்சுக்கு இடம் கொடுக்காமல் எமது முன்னேற்றத்திற்கும் எமது சமூகத்தின் வளர்ச்சிக்கும் ஏதுவான விடயங்களை செய்யக் கூடியவர்களின் வழியில் செல்ல வேண்டும்.

கனடாவில் தற்போது 4 இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் அவர்களில் 3 இலட்சத்து 25 ஆயிரம் பேர் வடபகுதி தமிழர்கள். இவர்கள் அங்கிருந்து தொடர்ச்சியாக அனுப்பும் நிதிகளைக் கொண்டு அப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்திய- இலங்கை அரசுகளின் ஒப்பந்தப்படி,அனல் மின்நிலையம் அமையவுள்ளதால் சம்பூர் மக்கள் சொந்தக் காணிகளில் குடியேற்றப்படமாட்டார்கள்-சிவநேசதுரை சந்திரகாந்தன்!
இந்திய- இலங்கை அரசுகளின் ஒப்பந்தப்படி, சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்நிலையம் அமையவுள்ளதால் அங்கு குடியிருந்த மக்கள் அந்தப் பகுதியில் மீளக் குடியேற்றப்படமாட்டார்கள் என்று கிழக்கு மாகாண முதலைமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தமிழோசையிடம் கூறினார்.

சம்பூர் மக்கள் சொந்த இடத்தில் தான் குடியேற வேண்டும் என்று விரும்பினாலும் சாத்தியப்பாடு இல்லாத பட்சத்தில் அவர்கள் மாற்றிடங்களை தெரிவு செய்து குடியேறித்தான் ஆகவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அரச காணிகள் ஊர்காவல் படைவீரர்களுக்கு வழங்கப்படுவதாக உள்ளூர் செய்திகளில் வெளியான தகவல்களையும் முதலமைச்சர் சந்திரகாந்தன் மறுத்துள்ளார்.

ஸ்ரீமாவோ ஆட்சிக் காலத்தில் தேக்கு மர உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட காணிகளில் புதிய மர நடுகையை மேற்கொள்வதற்காகவே ஊர்காவல் படை வீரர்களுக்கு அந்தப் பகுதிகள் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறினார்.

சுமார் 3000 ஏக்கர்கள் அளவான காணிகளே 3 ஆண்டுகளுக்கு இவ்வாறு ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஏக்கர்கள் வரையான காணிகள் என்று கூறப்படுவது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment