Tuesday, November 15, 2011பதுளை லுணுகல அடாவத்த பகுதியில் தேனீ கொட்டிய 13 பெண்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 8.30 அளவி்ல் தேயிலைக் கொழுந்து பறிப்பதற்காகச் சென்றவேளையில், இவர்களுக்கு தேனீ கொட்டியதாக லுணுகல பொலிஸார் குறிப்பிட்டனர்.
தற்போது இவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், தேனீ கொட்டியவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment