Wednesday, October 12, 2011நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில், கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது நேற்றிரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டிற்கு சிறியளவில் சேதம் ஏற்பட்;டுள்ள போதிலும், வீட்டில் இருந்த எவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட போது, வேட்பாளர் வீட்டில் இருக்கவில்லை எனவும் இந்த சம்பவம் குறித்து கல்முனை காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment