Sunday, October 9, 2011

கொழும்பு மாநகரசபை மீண்டும் UNP வசம்!

Sunday, October 09, 2011
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் பிரதான உள்ளூராட்சி சபைகள் பலவற்றை ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தன் வசப்படுத்தியது. 23 சபைகளுக்காக நடைபெற்ற தேர்தலில் மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருணாகல், நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, கம்பஹா உள்ளிட்ட பெரும்பாலான சபைகள் ஆளும் தரப்பினர் வசம் வந்துள்ளன. கல்முனை மாநகர சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகள் என வர்ணிக்கப்பட்ட மாநகர சபைகள் சிலவும் ஆளும் தரப்பினர் வசம் சென்றுள்ளது. கொழும்பு மாநகர சபையைத் தவிர வேறு எந்த ஒரு சபையையும் ஐக்கிய தேசியக் கட்சியால் இத் தேர்தலில் கைப்பற்ற முடியவில்லை.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்துப் பாட்டியிட்ட இரத்தினபுரி மாநகர சபையில் தோல்வியைத் தழுவியுள்ளது.

கொழும்பு மாநகர சபையை ஐக்கியதேசியக் கட்சி 24 ஆசனங்களைப் பெற்று தனதாக்கிக்கொண்டது. ஆளும் தரப்பிற்கு 16 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment