Friday, October 14, 2011

திவயின மற்றும் த ஐலன்ட் பத்திரிகைககளுக்கு கிளர்ச்சிக் குழுவினர் அறிவிப்பாணை!

Friday, October 14, 2011
ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினர் திமுது ஆட்டிகல மற்றும் அதன் மத்திய குழு உறுப்பினர் வருண ராஜபக்ஷ ஆகியோர் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக திவயின மற்றும் த ஐலன்ட் பத்திரிகைகள் வெளியிட்ட செய்தி சம்பந்தமாக அந்த பத்திரிகைகளுக்கு சட்டத்தரணி ஊடாக அறிவிப்பாணை அனுப்பபட்டுள்ளது.

இந்த செய்திகள் மூலம் பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், வருண ராஜபக்ஷ மற்றும் திமுத்து ஆட்டிகல ஆகியோருக்கு எதிராக அவதூறு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் இதனால், மேற்படி பத்திரிகைகள் தமது அடுத்த பதிப்பில் தவறை திருத்தி வெளியிட வேண்டும் எனவும் இல்லாவிட்டால் குறித்த பத்திரிகைகளிடம் 10 மில்லியன் ரூபாவை இழப்பீடாக கோரி வழக்கு தாக்கல் செய்ய போவதாகவும் அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் கிளர்ச்சி குழுவினர் கட்சியில் இருந்து விலகிய செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்குள் 60 லட்சம் ரூபாவை செலவிட்டிருப்பதாகவும் இது குறித்து புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் கிளர்ச்சி குழ தலைவரான பிரேமகுமார் குணரட்னத்திற்கு புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதியுதவிகள் கிடைத்துள்ளதாக என்ற சந்தேகம் புலனாய்வு பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.

No comments:

Post a Comment