Sunday, October 02, 2011பொதுநலவாய நாடுகள் அமைப்பு மாநாட்டின் போது நகல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட மாட்டாது என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மாதம் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மநாட்டின் போது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நகல் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கை திட்டமிட்டவாறு எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment